கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு - முச்சக்கரவண்டி சாரதி திடீர் மரணம்
கொழும்பில் முச்சக்கர வண்டி ஓட்டிச் சென்ற சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு முச்சக்கர வண்டிக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த நபர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டி அவரது கட்டுப்பாட்டை மீறி பல வாகனங்களுடன் மோதுண்டமையினால் பரபரப்பான நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு ஏற்பட்ட சாரதி ஸ்டீயரிங் மீது விழுந்ததால், முச்சக்கரவண்டி வீதியின் மற்ற பாதையை நோக்கி வட்டமிட்டு பல வாகனங்கள் மீது மோதியதுள்ளது. பின்னர் ஜீப் வண்டியில் மோதுண்டு முச்சக்கர நின்றுள்ளது.
உயிரிழந்தவர் போலியகொடை பிரதேசத்தை சேர்ந்த சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
