திடீரென மயங்கி விழுந்த இளம் பெண் மரணம்
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
எவ்வித நோய் அறிகுறியுமற்ற 26 வயதுடைய இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய மதுஷானி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இருமல், காய்ச்சல், தடுமன் போன்ற அறிகுறிகள் அற்ற பெண் இரவு தனது தாயாரிடம் நீர் ஒரு கோப்பை பெற்று குடித்தவுடன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவரது சடலத்தை ஒப்படைப்பதற்கு முன்னர் பீசீஆர் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri