யாழில் இளம் குடும்பஸ்தரொருவர் திடீரென உயிரிழப்பு
யாழ்.வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது திடீரென வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் சில நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு குணமடைத்திருந்துள்ளார்.அதன் பின்னர் இன்று (12) சாதாரண சுகயீனம் என வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தியாகராசா ஜெயரஞ்சன் (வயது 32) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரமோகன் மேற்கெள்ளவுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
