சந்தேக நபர்களை கைது செய்ய சென்ற பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி
கடந்த மாதம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிய கோயில் பகுதியில் வன்முறைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை வட்டுக்கோட்டைப் பொலிஸார் தேடி வந்தனர்.
அதனடிப்படையில் அராயில் உள்ள திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரமோகனது இல்லத்தில் சந்தேகநபர் ஒருவர் மறைந்திருந்த விடயம் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதற்கு முயன்றனர்.
இதனை அவதானித்த திடீர் மரண விசாரணை அதிகாரி, அச் சந்தேகநபர் தனது வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார் என்றும் அவருக்கும் குறித்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தனக்கு பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும் என்றும் அவரை கைது செய்ய வேண்டாம் என்று பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு பொலிசார், பாதிக்கப்பட்ட தரப்பினர் தமக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்தனர்.
அதன் பின்னரும் குறித்த அதிகாரி நீண்ட நேரமாக பொலிசாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தார். பி
ன்னர் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கரையும் இன்னொரு சந்தேக நபரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் (23) மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 21 மணி நேரம் முன்

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam
