வவுனியா பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி செல்ல உள்ள நிலையில் இடம் மாறிய தமிழ் மொழி (Photos)
வவுனியா பல்கலைக் கழகத்தின் திரை நீக்கப் பகுதியிலிருந்த தமிழ் மொழி கல்வெட்டுக்கு திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக் கழகத்திற்கு நாளை (11.02) விஜயம் செய்யும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதனை அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளார்.
இந்நிலையில் பல்கலைக் கழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட் சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் முக்கோண வடிவில் பல்கலைக்கழகத்தின் பெயருடன் கூடிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
வீதியிலிருந்து உட் செல்லும் போது காட்சிக்குப் புலப்படும் வகையில் தமிழ் மொழியும், மற்றைய இரு பங்கங்களில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வீதியிலிருந்து பல்கலைக்கழகத்திற்குள்
செல்லும் போது பீடங்களுக்குப் பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் தமிழ்
மொழியில் காட்சி கொடுத்த கல்வெட்டு அவசர அவசரமாக அகற்றப்பட்டு மறுபக்கம்
மாற்றப்பட்டுள்ளதுடன், முன் பகுதியில் சிங்கள மொழி கல்வெட்டும்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam