இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 115,200 ரூபாய்க்கும், 24 கரட் தங்கம் 124,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொரின் மதிப்பை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் பல நாடுகளில் கோவிட் தொற்று பரவல் ஆரம்பித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியாக அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.
இதற்கமைய, தங்கத்தின் விலையானது அடுத்த 12 - 15 மாதங்களில் உச்சம் தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது குறித்து மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் கணிப்பு படி அடுத்த 12 - 15 மாதங்களில் அவுன்ஸூக்கு 2000 டொலர்களுக்கு மேலாக அதிகரிக்கலாம் என கணிப்பிடப்பட்டுள்ளதுடன்,வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் எனவும் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri