தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றது.
இது இன்னும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
குறிப்பாக வார இறுதியில் முதலீட்டாளர்கள் புராபிட் செய்ததன் காரணமாக பெரியளவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
தங்கம் விலை குறையும்போதும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் டாலரின் மதிப்பு உச்சத்தினை எட்டலாம்.
இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அழுத்தத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய, தங்கம் விலையானது விரைவில் 1900 - 1910 டாலர்களை விரைவில் தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.



