இலங்கை வரும் விமானங்களின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்
கோவிட் தொற்றுநோய்க்கு முன்னர் இலங்கைக்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை நாடு திறக்கப்பட்டதன் பின்னர் குறைவடைந்துள்ளது.
கோவிட் தொற்றுநோய்க்கு முன்னர், 37 சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கைக்கு நேரடி விமானங்களை இயக்கியது. எனினும் நாடு மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து, 23 சர்வதேச விமான நிறுவனங்கள் மாத்திரமே இலங்கைக்கான விமானங்களைத் தொடங்கியுள்ளன.
மேலும் 08 விமான நிறுவனங்கள் சரக்கு போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, போலந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, போலந்தின் வார்சாவில் உள்ள சோபின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று காலை முதல் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...