பசில் நாடாளுமன்றம் வரும் திகதியில் திடீர் மாற்றம்
எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி நாடாளுமன்றம் வருவதற்கு தீர்மானித்திருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அந்த திகதியில் திடீர் மாற்றம் செய்துள்ளார். எனினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதனை உறுதி செய்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய திட்டமிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பசிலுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்யவுள்ளார். அதற்காக பலர் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்த பின்னர் அமைச்சராக பதவி பிரமாணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
