அநுரவின் உயிருக்கு அச்சுறுத்தல்! பாதுகாப்பில் திடீர் மாற்றம்..
ஜனாதிபதி அநுரகுமாரவை படுகொலை செய்வதற்கு சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அதனை நான் கடந்த காலங்களில் பகிர்ந்து கொண்டிருந்தேன், ஆனால் தற்போது தகவல்களை பகிர்ந்துகொள்வதை நிறுத்தியுள்ளேன் என்று ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியான அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.
உயிர் அச்சுறுத்தல்
ஜனாதிபதிக்கு இவ்வாறு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளமையானது நாட்டின் சட்டஒழுங்கையும், பாதுகாப்பு நிலவரங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உறுப்பினராக வேடமணிந்து அங்கு உள்நுழைந்து தற்கொலை தாக்குதலோ அல்லது கிளைமோர் தாக்குதலோ அல்லது நடத்த முற்பட்ட போது கைது நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மேலும் வீட்டின் வரைப்படமொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த வீட்டு வரைப்படம் ஜனாதிபதி அநுரகுமாரவின் வீட்டு வரைப்படமாக இருக்கும் என்று பொலிஸ் அதிகாரியான அஜித் தர்மபால சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri