யாழில் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்பால் குழப்பம்
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலங்களின் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காகப் மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்த வேளை, நல்லூர் பிரதேச செயலர், தமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்க வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்குப் பணித்திருந்தார்.
குழப்பம்
அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு நேற்று திருநெல்வேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையிலும், இன்றைய தினமும் கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கியமையால் குழப்பங்கள் ஏற்பட்டன.
அதேவேளை, கோப்பாய் பிரதேச செயலகத்தினரால் கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவித்தல் ஒட்டியமையால் குழப்பங்கள் ஏற்பட்டன.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த வேளை, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்குத் தான் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவித்தல் ஒட்டப்பட்டமையால் குழப்பம் ஏற்பட்டது.
மக்கள் ஆவேசம்
இதன்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல்களையும் மக்கள் கிழித்தெறிந்தனர். அதேவேளை, நேற்றைய தினமே ஊர்காவற்துறை மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலகங்களால் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அறிவிக்கப்பட்டமையால், அவ்விரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் குழப்பங்கள் இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களே குழப்பங்கள் ஏற்படக் காரணமாக
அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




நீர்கொழும்பு சிறை வாயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்..! சற்றுமுன்னர் நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட தகவல்
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்
நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri