100 நாட்களை கடந்த சூடான் கலவரம்
சூடானில் இராணுவத்துக்கும் துணை இராணுவப் படைக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் நேற்றைய தினத்தோடு (24.07.2023) 100-ஆவது நாளைக் கடந்துள்ளது.
சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் திகதி முதல் சண்டை நடந்து வருகிறது.
அந்த மோதல் ஆரம்பித்து 100 நாட்கள் நிறைவடையும் நிலையில், கிழக்கு சூடானிலுள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமொன்று சில விநாடிகளில் பயணிகள் விழுந்து நொறுங்கியது.
அடிக்கடி இடம்பெறும் இராணுவ புரட்சிகள்
இதில், அந்த விமானத்திலிருந்த 4 இராணுவ அதிகாரிகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
1956-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சூடானில் அடிக்கடி இராணுவப் புரட்சிகள் நடைபெற்று வருகின்றன.
சுதந்திரம் பெற்றதிலிருந்து இத்தனை ஆண்டுகளில் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி காலத்தை விட இராணுவ ஆட்சியே பெரும்பாண்மை வகித்து வருகின்றது.
கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த மோதலில் இதுவரை சுமாா் 3000 தொடக்கம் 5000 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
