வெளிநாடொன்றில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கி வரும் சிறுவர்கள்
யுத்தத்தினால் உருக்குலைந்துள்ள சூடான் நாட்டில், குறிப்பாக வடக்கு டார்பூர் (North Darfur) பிராந்தியத்தில் சிறுவர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (UNICEF) எச்சரித்துள்ளது.
யுனிசெப் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில், வடக்கு டார்பூரின் உம் பாரு (Um Baru) பகுதியில் பரிசோதிக்கப்பட்ட 500 சிறுவர்களில் 53 சதவீதத்தினர் (இரண்டில் ஒருவர்) கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆறு சிறுவர்களில் ஒருவருக்கு "உயிருக்கு ஆபத்தான" அளவிலான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொடர் இடம்பெயர்வு
தகுந்த சிகிச்சை கிடைக்காவிட்டால் இந்த சிறுவர்கள் சில வாரங்களிலேயே உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான RSFக்கும் இடையே தொடங்கிய போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் எல்-பாஷர் (el-Fasher) நகரம் RSF வசமானதை அடுத்து, அங்கிருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறி உம் பாரு போன்ற பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களே தற்போது பசி மற்றும் நோய்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எல்-பாஷர் நகருக்குச் சென்ற ஐநா குழுவினர், அந்த நகரம் தற்போது வெறிச்சோடிப் போயுள்ளதாகவும், அது ஒரு 'குற்றக்களம்' (Crime scene) போல காட்சியளிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மக்கள் அங்கே ஆங்காங்கே பிளாஸ்டிக் தாள்களால் அமைக்கப்பட்ட கூடாரங்களில் மிக மோசமான சூழலில் வசித்து வருகின்றனர்.
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri