சூடானின் பயங்கரம்: நூற்றுக்கும் அதிகமானோரை கொன்ற துணை இராணுவப்படைகள்
சூடானின் ( Sudan) துணை இராணுவ ஆதரவுப் படைகள், எல் கெசிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 124 பேரைக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது அந்த நாட்டில் இடம்பெற்று வரும் 18 மாத காலப் போரின் மிகக் கொடிய சம்பவங்களில் ஒன்றாகும் என்று கருதப்படுகிறது
அத்துடன் குறித்த மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் மிகப்பெரியது என்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்
உயர் பதவியில் இருந்த Abuagla Keikal என்ற துணை இராணுவ அதிகாரி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் இராணுவத்திடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, சரணடைந்த அதிகாரி வசித்து வந்த விவசாய கிராமத்தின் மீது இந்த பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட்;டுள்ளது.

ஏற்கனவே சூடானில் இடம்பெற்று வரும் போரால் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன் நாட்டின் சில பகுதிகளை கடுமையான பசி அல்லது பஞ்சத்துக்கும் தள்ளியுள்ளது. 2021 இல் நாட்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் அங்கு உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri