அப்பாவி மக்களுடன் சூடானிலிருந்து வெளியேறிய விமானம் மீது தாக்குதல்: மீட்பு நடவடிக்கைகளில் சிக்கல்
துருக்கியை சேர்ந்த C-130 ரக விமானம் சூடானிலிருந்து அப்பாவி பொது மக்களுடன் வெளியேறிய போது விமானம் மீது துணை இராணுவப்படை தாக்குதலை மேற்கொணடுள்ளது.
குறித்த விமானத்தின் எரிபொருள் சேமிக்கும் பகுதியில் குண்டு துளைத்து ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமானமானது பிரித்தானிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Wadi Sayedna விமான தளத்தில் தரையிறங்க தயாரான நிலையில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகளில் சிக்கல்
தற்போது பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பொதுமக்களை வெளியேற்றும் பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் உலக நாடுகள் துணிந்து செயல்பட்டு வருவதை துணை இராணுவத்தினர் மிக ஆபத்தான முறையில் சீர்குலைக்க பார்ப்பதாக சூடான் இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சூடான் தெருக்களில் இலக்கு வைத்து சுடும் துப்பாக்கி வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான எரிபொருள் பற்றாக்குறை இருப்பதால் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
