ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் முதல் முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்ட சத்திரசிகிச்சை
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முனனெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை இயக்குனர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.
37 வயதுடைய நபருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொற்கொள்ளப்பட்டுள்ளது. சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இந்த நபருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்பட்டது.
கடந்த 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திரசிகிச்சை நூறு வீதம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதென வைத்தியர் ஹேவகே தெரிவித்துள்ளார்.
மூளை சாவடைந்த 62 வயதுடைய நபரின் கல்லீரல் ராகம வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ளப்பட்டு 12 மணித்தியால அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட அறுவை சிசிசை வைத்தியர்கள் 10 பேர் கொண்ட குழுவினரால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொவிட் அவதானமிக்க காலப்பகுதியில் இந்த அவதானம் குறித்து சிந்திக்காமல் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை மிகவும் செலவுமிக்க ஒன்றாகும். இந்தியாவில் இதனை மேற்கொள்வதற்கு 120 லட்சம் ரூபாய் செலவாகும்.
எனினும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் எவ்வித கட்டணமும் அறவிடாமல் இலவசமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri