இலங்கையில் காய்ந்த மிளகாய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2025ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்குத் தேவையான முழு அளவிலான காய்ந்த மிளகாயை உற்பத்தி செய்யும் திட்டம் வெற்றியடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மகைலுப்பல்லம விவசாய ஆராய்ச்சி நிலையத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகூடிய விளைச்சலைக் கொடுத்த இரண்டு சமீபத்திய கலப்பின மிளகாய் இனங்களின் வெற்றியே இதற்குக் காரணம் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மகைலுப்பல்லம விவசாய ஆராய்ச்சி நிலையத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட MICH-1 மற்றும் MICH-2 ஆகிய இரண்டு சமீபத்திய கலப்பின மிளகாய் இனங்களின் வெற்றியின் காரணமாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வருடாந்த உலர் மிளகாய்த்தேவை
இலங்கையின் வருடாந்த உலர் மிளகாய்த் தேவை 55,000 மெற்றிக் தொன்களாகும். இதுவரை நாட்டில் 5000 மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு மீதமுள்ள 50,000 இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2023-ம் ஆண்டு 18,779 ஹெக்டேரில் மிளகாய் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்குத் தேவையான முழு அளவிலான மிளகாயை உற்பத்தி செய்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam