பலரின் உயிரை காவு கொண்ட தரமற்ற சீன ஏர்பேக் : தடை விதித்தது அமெரிக்கா
அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சீன நாட்டு ஏர்பேக் உதிரிபாகங்களுக்குப் தடை விதித்துள்ளது.
சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்கள் வெடித்து சிதறியதால், அமெரிக்காவில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த முகமை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 'ஜிலின் மாகாண டெட்டியானுவோ' அல்லது 'டி.டி.என்' (DTN) எனப்படும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த உதிரிப்பாகங்கள் அமெரிக்க சாரதிகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உக்ரைனில் தனியார் வான் பாதுகாப்புப் படைகள் அறிமுகம்: முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க புதிய முயற்சி
விபத்து
மே 2023 முதல் அமெரிக்காவில் நிகழ்ந்த 12 விபத்துக்களில் இந்தத் தரமற்ற ஏர்பேக் உதிரிப்பாகங்களே உயிரிழப்பு அல்லது கடுமையான காயங்களுக்குக் காரணமாக இருந்துள்ளன.

இந்த உயிரிழப்புகள் அனைத்தும் ஜெனரல் மோட்டர்ஸ் (GM) மற்றும் ஹூண்டாய் (Hyundai) ரக வாகனங்களிலேயே நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்தின் போது உயிரைக் காக்க வேண்டிய ஏர்பேக் உதிரிப்பாகங்களே வெடித்துச் சிதறி உயிருக்கு உலைவைப்பதால், அமெரிக்க வாகனப் பாதுகாப்பு முகமை இந்தத் தடையை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் இத்தகைய தரமற்ற உதிரிபாகங்களைத் தவிர்க்குமாறும், வாகன உரிமையாளர்கள் தங்களது ஏர்பேக்குகளை அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மட்டுமே பரிசோதிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வர்த்தகம் மற்றும் இறக்குமதி விதிகளை மீறி சந்தைக்கு வரும் இத்தகைய பாகங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊடகங்களுக்கு எதிரான ட்ரம்ப்பின் சட்டப்போராட்டம்: நீதிமன்ற பின்னடைவுகளையும் மீறித் தொடரும் அழுத்தங்கள்