சவுதி சிறையில் ஆபத்தில் அனோஜன்! வெளிவராத அந்த திகில் நிமிடங்கள்
கதிர்காமப் பாதயாத்திரையின் போது சுப்பிரமணியம் என்ற நாய் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட ஒரு மோதலில், கோபத்தில் இலங்கையை சேர்ந்த தற்போது சவுதி அரேபியாவில் இருக்கும் இளைஞன் ஒரு தவறான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
பின் அதை நீக்கி மன்னிப்பு கோரியிருந்தாலும், அவர் மீது கடுமையான முறைபாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கட்டுமானத் துறையில் பணியாற்றும் அனோஜன், ஒரு பட்டதாரி மற்றும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்.
அடுத்த மாதம் அவருக்குத் திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்த விவகாரம் அவரது வாழ்க்கையைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
வத்திக்கான் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தம்மைக் கொல்ல வந்தவரையும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்றும் விடுத்த முன்னுதாரணங்கள் நாம் அறிந்ததே..
அதனால் அனோஜன் தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு வழங்கும்படியும், அவரை மீட்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க அரசியல் தலைவர்களையும், முஸ்லிம் சமூகத்தையும் பலரும் கேட்டுக்கொள்கிறார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...