தேர்தல் சட்டத்திருத்தங்கள் உள்ளடங்கிய சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
இலங்கை தேர்தல் முறைமை தொடர்பான சட்டங்களை திருத்துவதற்கான முன்மொழிவு உள்ளடங்கிய 03 தனியார் உறுப்பினர் சட்டமூலங்களை நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தனியார் உறுப்பினர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அதற்கமைய, 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தை நிறுத்துவதற்கான சட்டமூலம் மற்றும் 1946 ஆம் ஆண்டு 53 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்பன இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, இந்த நிறுவங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு 35 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழக்க வேண்டியதன் அவசியத்தை இந்தத் திருத்தங்கள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        