நடிகை குஷ்புக்கு யாழ்ப்பாணத்திற்கு வந்தால் துடைப்ப கட்டையால் ஆசீர்வாதம்: எம்.வி.சுப்ரமணியம் ஆவேசம் (Video)
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய நடிகை குஷ்பு யாழ்ப்பாணத்திற்கு வந்தால் அவருக்கு துடைப்பக் கட்டையால் ஆசிர்வாதம் வழங்கப்படும் அத்துடன் அதைவிட கழிவு பொருட்களாலும் அவருக்கு ஆசீர்வாதம் வழங்கப்படும் என வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவருமான எம்.வி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்றையதினம் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நடிகை குஷ்பு அவர்கள் விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்திருக்கின்றார். இது ஒரு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
அவரது இந்த கருத்தானது எம்மவர்கள் மத்தியில் தாக்கத்தினையும் மிகுந்த ஒரு ஏமாற்றத்தினையும் தந்துள்ளது.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாத இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் இராணுவ உதவி கேட்டு இந்தியாவிற்கு சென்றிருந்தார்.
அந்த நேரம் இந்திய பிரதமர், ஜே.ஆர். ஜெயவர்த்தன தங்களை விட்டு வேறு நாடு அதாவது குறிப்பாக சீனாவிற்கு சென்று விடக்கூடாது என்ற வகையில், எங்களது நலனையும் கருத்தில் கொள்ளாது சிங்கள மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர் கேட்ட ரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஒப்புக்கொண்டார்.”
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam