மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்
உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது 78 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கம்பஹா மாவட்டத்திலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பொதிகளை மகிந்த ராஜபக்ச நேற்று (18.11.2023) வழங்கி வைத்தார்.
தேர்தலில் மொட்டுக்கே வெற்றி
கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் எமது கட்சியே வெற்றி பெறும். தேர்தல்களை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் நிலையிலேயே உள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறும் என்று எமக்குத் தெரியாது. எனினும், உரிய
நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
