இலங்கையில் மூடிமறைக்கப்படும் மனித புதைகுழிகள் விவகாரம்: பிரித்தானியாவில் கையளிக்கப்பட்ட ஆய்வறிக்கை

Sri Lankan Tamils Sri Lanka United Kingdom World
By Sudaron Jun 25, 2023 04:00 AM GMT
Report

இலங்கையில் மூடிமறைக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

பாரிய புதைகுழிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிநிற்கும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் இந்த அறிக்கை வெளியானது.

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்த அறிக்கையின் பிரதிகளை நேற்று(24.06.2023) பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேரில் சென்று கையளித்துள்ளனர்.

இந்த சந்திப்புக்களின் போது, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான விடயங்களை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெளிவுபடுத்தினர்.

இலங்கையில் மூடிமறைக்கப்படும் மனித புதைகுழிகள் விவகாரம்: பிரித்தானியாவில் கையளிக்கப்பட்ட ஆய்வறிக்கை | Study Report On Massive Human Burials Sri Lanka

கேள்வி எழுப்புவதாக வாக்குறுதி

இந்த ஆய்வு அறிக்கையை பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புலம்பெயர் உறவினர்களின் வேதனைகளை அக்கறையுடன் கேட்டதுடன் மேலும் இவ்விடயம் தொடர்பாக தாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதாகவும் வாக்களித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரித்தானியா வாழ் உறவினர்களின் சங்கத்தின் சார்பில் விஜய் விவேகானந்தன், டிலக்‌ஷன் மனோரஜன், லக்ஸ்மன் திருஞானசம்பந்தர், நிலக்ஜன் சிவலிங்கம், சாருப்பிரியன் ஸ்ரீஸ்கரன், புகழினியன் விக்ட்டர் விமலசிங்கம், மாதவ மேஜர் வேலுப்பிள்ளை, ரோய் ஜக்ஷன் யேசுதாசன், சுபதர்ஷா வரதராசா, சுபமகிஷா வரதராசா ரஞ்சனி பாலச்சந்திரன், செல்வகுமாரி லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவலங்களை மறைக்கும் செயற்பாடு

உலகின் காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகளை அதிகமாக கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு இடமளிக்கப்படாது தடை செய்யப்படுகின்ற விடயமானது பாரிய மனித புதை குழியின் வெளிப்படை தன்மையை அவலங்களை முழுமையாக மறைக்கின்ற செயல்பாடாகவே பார்க்கப்படுகின்றது என இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை தென்னாபிரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டம் (International Truth and Justice Project – ITJP)இன் தலைமையில், இலங்கையில் ஐனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (Journalist For Democracy in Sri Lanka – JDS), காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் (Families of the Disappeared – FOD) மற்றும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் (Centre For Human Rights and Development – CHRD) ஆகிய மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US