உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் பல்வேறு மாணவர்கள் மூன்று பாடங்களிலும் திறமை சித்தி
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் சப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை நகரில் அமைந்துள்ள கே/தெஹி/புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தப் பாடசாலையில் 4 மாணவர்கள் 3 பாடங்களிலும் 'ஏ ' சித்திகளைப் பெற்று அசத்தியுள்ளனர்.
கலைப் பிரிவில் ஜெயக்குமார் ஜெரோன் மற்றும் நாகராஜா கிஷாந்தனி ஆகிய மாணவர்கள் 3 பாடங்களிலும் 'ஏ' சித்திகளைப்பெற்றுள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் சிவராஜா காயத்திரி மற்றும் மஹேந்திரன் கோகிலா ஆகிய மாணவர்கள் 3 பாடங்களிலும் 'ஏ' சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும், தங்களது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
செய்தி - ராகேஸ்
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி
வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி பெற்ற சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது,
கணிதப் பிரிவில் அன்ரன் தேவராஜன் தேனுஜன் ஏ 2பி, வரதராசா தர்சிகன் ஏபிசி, உதயகுமாரன் தினேஷ் 2பி சி, வடிவேல் விக்னேஷ் பி 2சி, கிருஷ்ணதேவன் ரவிந் பிசி எஸ், சிறிரங்கநாதன் தனுசன் 3சி சித்தியை பெற்றுள்ளனர்.
உயிரியல் பிரிவில் சிவபாலன் நந்தசுந்தரன் 3சி சித்தியை பெற்றுள்ளார்.
வணிகப் பிரிவுவில் அபிநயா செந்தில்வேல் 3ஏ, கிஷானி ரங்கநாதன் பி 2சி, சோபிகா இலங்கேஷ்வரன் பி 2சி, ஜருணா விஜயசிறி 3சி சித்திகளை பெற்றுள்ளனர்.
கலைப் பிரிவுவில் தனுஷா முருகையா 3ஏ, நாகைமதி தினேஷ்குமார் 2ஏ சி, சிவனியா சிறிதரன் 3பி, சந்தியா கண்ணதாசன் ஏபிசி, சிறி அருளானந்தராசா கண்ணதாசன் 2பி சி, கிஷானி யோகேந்திரன் ஏபி எஸ், ஞானேஷ்வரன் யதுசிகன் பி 2சி, சிவகாமி சிவகுமார் பி 2சி சித்திகளை பெற்றுள்ளனர்.
மேலும், பொதுப் பிரிவில் புவிதா மகேந்திரராஜா பி 2எஸ் சித்தியையும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் பவித்திரா பரிபூரணா ஆனந்தம் 2பி சி, குயின்சியா மகேஷ்வரன் 2பி சி, கஷ்வினி சுதர்சன் பி 2சி, ஜோன் ஒலிவர் ஜெனிபா பிசி எஸ், குகனேசன் விமலன் 2சி எஸ், விஜிந்தா தேவகுமார் 3சி, அபிநயா குலேந்திரன் சி 2எஸ்சித்திகளை பெற்றுள்ளனர்.
பொறியியல் தொழில்நுட்ப பிரிவு அல்பேர்ட் குணசூரியர் டிலக்சன் அருள்ராஜ் ஏபிசி சித்தியை பெற்றுள்ளார்.
செய்தி - கஜி
வவுனியா
உயர்தர பரீட்சையில் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சந்திரசேகரன் ருக்சிகா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் உயிர்முறைமை தொழில் நுட்பப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் சந்திரசேகரன் ருக்சிகா என்ற மாணவி 2ஏபி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 134 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அத்துடன், உயிர்முறைமை தொழில் நுட்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையை வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த உபைதுல்லா பாத்திமா ஹப்ஸா என்ற மாணவி 2ஏபி சித்திகளைப் பெற்று இரண்டாம் நிலையும், சைவப்பிரகாச மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஜதுசனா என்ற மாணவி 2ஏபி சித்திகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளனர்.
செய்தி - திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |