மாணவர்கள் பல்துறை சார்ந்தவர்களாக உருவாக வேண்டும்: மகேசன் (Photos)

Ministry of Education Jaffna Sri Lankan Schools
By Kajinthan Mar 04, 2023 12:22 PM GMT
Report

மாறிவரும் உலகிற்கு ஏற்ப மாணவர்கள் பல்துறை சார்ந்தவர்களாக உருவாக்கப்பட வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (04.03.2023) சனிக்கிழமை யாழ் உரும்பிராய் கற்பக இராஜேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்ற ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மாணவர்கள் பல்துறை சார்ந்தவர்களாக உருவாக வேண்டும்: மகேசன் (Photos) | Students Should Become Versatile

ஆளுமை விருத்தி

எதிர்காலம் மாணவ சமுதாயம் கல்வி, மொழி அறிவு, விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய கல்வி நிலைகளை விருத்தி செய்வது காலத்தின் தேவையாக உள்ளது.

ஒருபுறம் வேலை வாய்ப்பு இல்லை என்கிறோம், ஆனால் மறு புறம் வேலை இருக்கிறது ஆனால் எமது கல்வி அதை நோக்கியதாக அமையவில்லை.

ஏனெனில் ஒரு மாணவன் பெற்றோர் , சமூகம் மற்றும் ஆசிரியர்களின் கனவுகளை சுமந்து கொண்டு செல்கின்ற நிலையில் அவனது ஆளுமை பல துறைகளிலும் விருத்தி செய்ய வேண்டி உள்ளது.

மாணவர்களை குறுகிய வட்டத்துக்குள் நிற்க விடாமல் பரந்துபட்ட அளவில் அவர்களின் ஆளுமைகளை விருத்தி செய்வதற்கு அவர்களை வழிப்படுத்துபவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் பல்துறை சார்ந்தவர்களாக உருவாக வேண்டும்: மகேசன் (Photos) | Students Should Become Versatile

உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள்

இன்றைய உலகின் அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் விளையாட்டு வீரர்கள் இருப்பது பலருக்கு தெரியாத நிலையில் விளையாட்டுக் கல்வியின் முக்கியத்தை இளம் சமுதாயம் சிறந்த முறையில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா துன்பியல் நிகழ்வு எமக்கு பல பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கின்ற நிலையில் விடாமுயற்சி மூலம் சாதிக்கலாம் என்ற உணர்வு எம்மவர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆகவே யாழில் பல்வேறு சமூக அறக்கட்டளை நிறுவனங்கள் தமது சமூகம் சார்ந்து பல்வேறு வேலை திட்டங்களை மேற்கொள்ளும் நிலையில் இளம் சமுதாயத்தை சிறந்த முறையில் வழிப்படுத்த உதவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன், சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US