நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளாடைகளை தொங்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் (Video)
நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மீது உள்ளாடைகளைத் தொங்கவிட்டு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் சற்று முன்னர் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன், கண்ணீர்ப் புகைத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் பின்னர் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்ட மாணவர்கள் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மீது உள்ளாடைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
