ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு வகுப்புத் தடை
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆறுபேருக்கு வகுப்புத் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சம்பவத்தை அடுத்து ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட இரண்டாம் ஆண்டு மாணவனொருவர் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.
கைது செய்ய நடவடிக்கை
குறித்த மாணவர் தற்போதைக்கு வெலிகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதே வேளை சம்பவம் குறித்து ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே நேரம் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
