அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் கிளிநொச்சி தருமபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் (Photos)
கிளிநொச்சி - தருமபுரம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் பயன்பாட்டுக்கான மலசலகூடங்கள் சேதமடைந்தும், தண்ணீர் வசதிகள் இன்றியும் காணப்படுவதானால் அதனை பயன்படுத்த முடியாது மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சி வடக்கு கல்வி நிலையத்தின் கீழ் உள்ள தருமபுரம் மகா வித்தியாலய வளாகத்தில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட மலசலகூடங்கள் மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அசௌகரியங்களுக்குள்ளாகும் மாணவர்கள்
நீர் விநியோக இணைப்புக்கள் இன்றி, இணைப்புக்கள் சேதமடைந்தும், மலசல கூடங்களின் கூரைகள் சேதமடைந்தும் காணப்படுவதனால் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு மலசலகூடவசதிகள் இன்மை
காரணமாக பாடசாலை நேரங்களில் மாணவர்கள் இயற்கை கடன்களை நிறைவேற்றுவதில் பெரும்
அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.







ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
