வவுனியாவில் சாதாரண தர பரீட்சை இடைவேளையில் மாணவர்கள் முரண்பாடு
வவுனியா (Vavuniya) - குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை(G.C.E.Ordinary Exam) நிலையத்தில் இரு பாடசாலை மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (10.05.2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
மாணவர்களுக்கிடையே மோதல்
குறித்த பரீட்சை நிலையத்தில் இன்றையதினம் (10) க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெற்ற நிலையில் அங்கு பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பாடத்தின் ஒருபகுதி நிறைவுற்றதுடன் நீண்ட நேரம் இடைவேளை வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, பரீட்சை மண்டபத்திற்கு வெளியில் ஒன்றுகூடிய இரு பாடசாலைகளை சேர்ந்த ஆண் மாணவர்கள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டுள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் சற்றுநேரம் குழப்பம் நீடித்ததுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வீதியால் செல்பவர்கள் அங்கு ஒன்று கூடியமையால் முரண்பட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri