அட்டாளைச்சேனையில் ஆசிரியர் மீது தாக்குதல்: இரண்டு மாணவர்கள் கைது
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவரைப் பெற்றோர் சிலரும் மாணவர்களும் இணைந்து தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27.07.2023) ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல்
நேற்று (26) பாடசாலை நிறைவடைந்து வெளியேறிய போது, சில மாணவர்களும் பெற்றோரும் இணைந்து ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்று கூறப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாடசாலையின் ஒழுக்கக்கோவையைச் செயற்படுத்துவதில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ள பொலிஸார், ஏனையோரைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan