யாழில் பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி செயல்!
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவன் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் நேற்றையதினம்(21) இராசயனவியல் பரீட்சை இடம்பெற்றது.
அவசர சிகிச்சை
பரீட்சைக்கு சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலைக்குள் சென்ற போது பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் மாணவன் அதனைப் பொருட்படுத்தாது பரீட்சை மண்டபத்தில் இருந்த போது குருதிப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் பரீட்சை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவசர சிகிச்சையின் பின்னர் நோயாளர் காவுவண்டியில் மீண்டும் பாடசாலை கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் பரீட்சை எழுதியுள்ளார்.
இன்று சனிக்கிழமை (22) இடம்பெறும் பரீட்சைக்கும் அவர் நோயாளர் காவுவண்டி மூலம் பரீட்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan