முல்லைத்தீவில் சீர்குலையும் மாணவர்களின் ஒழுக்கம் : கவலை வெளியிட்டுள்ள சமூகத்தினர்
முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள பாடசாலையொன்றில் உயர்தர வகுப்புக்களுக்கு கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை உயர்தர கலைப்பிரிவு மாணவன் ஒருவர் தாக்க முற்பட்ட சந்தர்ப்பம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பாடசாலையில், மாணவர்களிடையே முரண்பாடுகள் நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், பாடசாலை நேரத்தில் வகுப்பறைகளிலும் பாடசாலை வளாகத்திலும் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கைக்கலப்பில் முடிந்த பல சந்தர்ப்பங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒழுக்கமின்மை
இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அதிபரினால் குறித்த கைகலப்புக்களின் போது அவற்றை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது மேற்கொண்டு அவை நடக்காதிருப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கோ முயற்சிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, பாடசாலையில் நடைபெற்ற முரண்பாடுகளின் தொடர்ச்சியாக பாடசாலைக்கு வெளியிலும் மாணவர்கள் தங்களிடையே முரண்பட்டுக்கொண்ட சந்தர்ப்பங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனைக்கு அண்மையில் அமைந்துள்ள இந்த பாடசாலையில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் பாராமுகமாக இருப்பது கவலையளிப்பதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, மாணவர்களிடையே நிலவி வரும் முரண்பாடுகளின் தொடர்ச்சியாக அவர்களிடத்தில் ஏற்பட்டுவரும் ஒழுக்கமின்மையை சீர் செய்ய பாடசாலைச் சமூகம் முயற்சிக்காமை வருத்தத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |