டயனாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சஜித் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா! வெளியான தகவல்
இலங்கை பிரஜை அல்லாதவர்கள் அரசியல் கட்சிகளை பதிவு செய்யத் தடையில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜை அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றினை பதிவு செய்ய சட்டத் தடைகள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பிரஜை
எனினும், இலங்கை சட்டத்தின் பிரகாரம் இலங்கை பிரஜை அல்லாதவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையர் அல்லாதவர்கள் தேர்தலில் வாக்களிக்கவும் முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்களில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயனா கமகே கையொப்பமிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அபே ஜாதிக பெரமுன கட்சியின் பொதுச் செயலாளராக டயனா ஒரு போதும் கடமையாற்றியதில்ல என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
அபே ஜாதிக பெரமுன கட்சியானது முன்னாள் அமைச்சர் அமரர் மங்கள சமரவீர மற்றும் அமரர் சிறிபத்தி சூரியாரச்சி ஆகியோரினால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக ருவான் பெர்டினன்டஸ் கடமையாற்றியதாகவும் பின்னர் அந்தப் பதவியை டயனாவின் கணவர் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே டயனா கமகேவிற்கு எதிராக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.