கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சீருடைத் தேவையில் 80 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 20 சதவீதம் இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
4.1 மில்லியன் சீருடை விநியோகம்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், முதற்கட்டமாக சீனாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்த 70 சதவீத சீருடைத் துணிகள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது கட்டத்தில், மீதமுள்ள 05 மாகாணங்களுக்கு 30 சதவீத சீருடைத் துணிகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இதேவேளை 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர் பிக்குகளுக்கு சீருடைகள் விநியோகிக்கப்பட உள்ளன.”என தெரிவித்துள்ளார்.
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan