முல்லைத்தீவில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்
முல்லைத்தீவு (Mullaitivu) கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவனின் தலையில் ஆசிரியர் தாக்கியதால் பாடசாலை செல்வதற்கு மாணவன் மறுப்புத் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தலையில் தாக்கியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் குறித்த மாணவன் பாடசாலை செல்வதற்கு மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில் சம்பவத்துடன் தொடர்பட்ட ஆசிரியருடன் பெற்றோர் சந்திப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதிபர் குறித்த ஆசிரியருடன் தாம் பேசுவதாக தெரிவித்ததாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தமது பிள்ளைக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியர் தம்முடன் கலந்துரையாடாத நிலையில் விடயம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்திய நிலையில் பொலிஸார் நேற்றைய தினம் குறித்த மாணவனையும் பெற்றோரையும் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரித்துள்ளனர்.
இதன் போது குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
