முல்லைத்தீவில் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்த மாணவன் பரீட்சையில் சித்திப்பெற்று சாதனை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சையில் சித்திப்பெற்று மாணவரொருவர் தனது சாதனையினை நிலை நாட்டியுள்ளார்.
தலவாக்கலை - நுவரெலியா பகுதியினை சேர்ந்த யூட் நிலக்சன் என்ற மாணவன் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நிலையில் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆரோவனம் சிறுவர் விடுதியில் கல்வியை தொடர்ந்த மாணவன் அதன் பின்னர் முல்லைத்தீவு அருட்தந்தை றொபின்சன் அடிகளாரின் கற்பித்தலின் கீழ் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர் விடுதியில் நின்று கல்வி கற்று வந்துள்ளார்.
ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் எந்த தொழில்நுட்ப தொலைத்தொடர்பு சாதனங்களும் அற்ற நிலையில் நிகழ்நிலை கல்வி கூட கற்காத நிலையில் 4 ஏ, 2பி, 2சி என சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளார்.
எதிர்காலத்தில் உயர்தரத்தில் கலைபிரிவினை தெரிவு செய்து பல்கலைக்கழகம் சென்று பல கல்விமான்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் தான் கல்வி கற்று வருவதாகவும் குறித்த மாணவன் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார்.
 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        