கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப்பிரிவில் 3A சித்திகளை பெற்று மாணவி சாதனை
இன்றைய தினம் வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கிளி/கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி மகேந்திரம் டர்சிகா கிளிநொச்சி மாவட்டத்தில் 3A பெறுபேறுகளைப்பெற்று முதல் நிலை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கல்விப்பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தில் வணிகப்பிரிவில் தோற்றி கிளிநொச்சி மாவட்டத்தில் 3A பெறுபேறுகளைப்பெற்று முதல் நிலை பெற்றுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள கோரக்கன்கட்டு வை. எம்.சி எனும் குக் கிராமத்தில் வசிக்கும் குறித்த மாணவியே இவ்வாறு முதல் நிலை பெற்றுள்ளார்.
தந்தை கல்விக்காக கூலி தொழிலையும்.எனது தயார் ஆடுகள் வளர்த்தும் அதில் வருகின்ற வருமானத்தில் வீட்டு செலவுகளையும் கவனித்து அதில் எஞ்சிய வருமானத்தில் எனது கல்வியை தொடர்ந்து இன்று இவ்வாறு பெறுபேறுகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக வந்து எனது கிராமத்தையும், மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் எனவும்,தனது கல்விக்கு உதவிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam