2021 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பாடசாலை மாணவர் ஒருவர் ஹேக் செய்து பெறுபேறுகளை மாற்றியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து முடிவுத் தரவைப் பெற்று, அவற்றை தனது இணையதளத்தில் வெளியிட முயன்றுள்ளார் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காலி பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவர் இணையத்தளத்தை ஹேக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, தனியான இணையப் பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட 270,000 மாணவர்களின் தரவுகள்
சந்தேகநபர் ஏறக்குறைய 270,000 மாணவர்களின் தரவுகளைத் திருடி அவர்களின் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளம் போன்ற இணையத்தளத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட 5000 உறுப்பினர்களைக் கொண்ட தனியார் டெலிகிராம் குழுவில் தனியான இணையதளப் பக்கத்தையும் மற்றும் ஹேக்கிங் குறித்த வழிமுறைகளையும் குறித்த மாணவர் பகிர்ந்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தீவிர விசாரணை
இது தொடர்பில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தந்திரோபாய ரீதியாக டெலிகிராம் குழுவிற்குள் நுழைந்து அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மாணவனின் இணையப் பக்கத்தை ஹேக் செய்த பின்னர், அதனை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டெலிகிராம் குழுவிற்கு அறிவித்துள்ளனர்.
அரசாங்க இணையத்தளம்
பின்னர் குறித்த மாணவன் நேற்று முன்தினம் (07) தனிமைப்படுத்தப்பட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காலியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அந்த மாணவர் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதற்காக அரசாங்க இணையத்தளத்தை ஹேக் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
