கந்தளாய் பகுதியில் கணிதப் பிரிவில் பெறுமை சேர்த்த மாணவி
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கணிதப் பிரிவில் மாணவி பைரூஸ் பாத்திமா சிம்லா A2B என்ற சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, திருகோணமலை மாவட்ட மட்டத்தில் 23ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்த சாதனையின் மூலம் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தி/ அல்-தாரிக் மஹா வித்தியாலயத்தில் இருந்து பொறியியல் (Engineering) துறைக்கு தெரிவான முதல் மாணவி என்ற வரலாற்றுப் பெருமையையும் சிம்லா பெற்றுள்ளார்.
வெற்றியின் பின்னணி
இந்த வெற்றிக்குப் பின்னால் மாணவியின் விடாமுயற்சி, கட்டுப்பாடான மற்றும் திட்டமிட்ட கற்றல் முறைகள் முக்கிய பங்காற்றியுள்ளன.

அதேவேளை, அவரது பெற்றோரின் உறுதியான நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களும் இவ்வெற்றிக்கு வலுவான ஆதாரமாக அமைந்துள்ளன.
இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மாணவி சிம்லாவுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan