சோகத்தை ஏற்படுத்திய மாணவனின் மரணம்: வீதியைக் கடக்க முற்பட்டபோது சம்பவம்!
குருணாகல் - அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் (19.04.2023) இடம்பெற்றுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுபொடயிலிருந்து மூனமல்தெனிய நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் சென்று கொண்டிருந்த குறித்த பாடசாலை மாணவன், பேருந்தில் இருந்து இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் சிறிய ரக லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விசாரணை
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன், குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெட்டிபொல
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



