ஊஞ்சலில் இருந்து விழுந்து மாணவன் பலி
மொறட்டுவை மொறட்டுமுல்ல வில்லோராவத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் திடீர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது.
அரச பாடசாலை ஒன்றில் பயின்று வந்த இந்த மாணவர், மதிய இடைவேளையின் போது, மேலும் சில மாணவர்களுடன் பாடசாலையில் இரும்பில் செய்யப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த போது கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த மாணவர், லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
14 வயதான இந்த மாணவர், மொறட்டுவை இதிபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மொறட்டுமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri