ஜனாதிபதி மாளிகையில் சேதம் ஏற்படுத்தியவர்களை கண்டறிய மக்களின் உதவியை கோரும் பொலிஸார்
ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்து அங்குள்ள சொத்துக்களுக்கு சேத விளைவித்தமை தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டகார்கள் சிலர் பலவந்தமாக பிரவேசித்து அங்குள்ள சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பான விசாரணைகளை கொழும்பு மத்திய பிராந்திய குற்ற விசாரணை பிரிவு நடத்தி வருகிறது.

இதனடிப்படையில் அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சமூக வலைத்தளங்கள் மற்றும் சீ.சீ.டி.வி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு இதுவரை அவர்கள் யார் என்பதை கண்டறிய முடியாத 32 பேரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால், 071-8591559 / 071-8085585 / 011-2391358 / 1997 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸார் அடையாளம் காண தேடி வரும் நபர்களின் புகைப்படங்கள்
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri