கிண்ணியாவில் மின்சாரம் தாக்கி மாணவன் பரிதாபமாக பலி
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பிரதேசத்தில் நேற்று(14.01.2025) மாலை மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா காக்காமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும், காதர் முஹம்மது சாதிக் என்ற 13 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
நேற்று(14) மாலை குறித்த சிறுவன் தனது வீட்டில் மின் ஆளியை (Switch) அழுத்தியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிறுவன் உடனடியாக மீட்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் இன்று(15) காலை கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து, மேலதிக பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பில் உறவினர்களால் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri