க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவன் பலி
கும்புக்கன் ஓயாவில் மூழ்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு பொசன் போயா தினத்தன்று உயிரிழந்துள்ளார்.
மொனராகலை றோயல் தேசிய பாடசாலையில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் திரந்த டில்ஷான் என்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன்
வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர்கள் குழுவொன்று இந்த மாணவனின் வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவர்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் நீராடச் சென்றுள்ளனர்.
குறித்த குழுவினர் நீரோடையில் நீந்திக் கொண்டிருந்த போது, பாடசாலை மாணவர் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர் ஆனால் முடியாமல் போயுள்ளது. பின்னர், பிரதேச மக்களின் ஆதரவுடன், இறந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.
இதற்கு முன்னரும் இந்த இடத்தில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
