பாடசாலை வகுப்பறையில் மோதிக்கொண்ட மாணவர்கள் - ஒருவர் படுகாயம்
நீர்கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக ஒருவர் காயம் அடைத்துள்ளார்.
பாடசாலை மாணவன் மற்றொரு மாணவனைக் காகித வெட்டியால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் பாடசாலையில் நடந்துள்ளது. வெட்டுக்காயங்களுடன் காயமடைந்த 16 வயது மாணவன் சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பாடசாலை
காயமடைந்த மாணவனும், சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு மாணவனும் தங்கொட்டுவ பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி பயில்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், குறித்த இரு மாணவர்களுக்கும் பாடசாலையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகவும், சம்பவ தினத்தன்று அவர்களுக்குள் வன்முறை ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மாணவர்களில் ஒருவன் மற்றொரு மாணவனின் கையைக் காகித வெட்டியால் வெட்டிக் காயப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam