திருகோணமலையில் ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து போராட்டம்
திருகோணமலையில் ஆசிரியர் மீது மாணவன் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றையதினம்(13.11.2026) பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை, அபேயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், பாடசாலை நேரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவன் ஒருவனால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார்.
கவனயீர்ப்பு போராட்டம்
காயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திருகோணமலை பொலிஸார் மற்றும் கல்வித் திணைக்களம் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


