ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு..! நியாயம் கேட்டு சென்ற பெற்றோர் நேர்ந்த கதி

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government Crime
By Dhushi Jul 23, 2026 01:24 PM GMT
Report

ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலுள்ள தமிழ் மகளிர் பாடசாலையொன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் சில மாணவிகள், அவர்களின் வகுப்பாசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிலிப்பைன்ஸில் இலங்கை மற்றும் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

பிலிப்பைன்ஸில் இலங்கை மற்றும் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

மாணவி வைத்தியசாலையில் அனுமதி

இதில் ஒரு மாணவி கடுமையான உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆரம்ப சிகிச்சைகளால் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகளில் மாணவிக்கு நோய் பயம் மற்றும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு..! நியாயம் கேட்டு சென்ற பெற்றோர் நேர்ந்த கதி | Student Assaulted By Teacher Suffers Mental Health

பின்னர், மனநல வைத்திய நிபுணரின் பரிசோதனையிலும் அதே நிலைமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் பெற்றோர் அறிவித்ததுடன், மாணவிக்கான வகுப்பு மாற்றத்தையும் கோரியுள்ளனர்.

அதன் அடிப்படையில் மாணவி வேறு வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், மாணவி புதிய வகுப்பில் ஒரு நாள் மட்டுமே கல்வி கற்ற நிலையில், தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் வகுப்பாசிரியர் மற்றொரு ஆசிரியருடன் முரண்பாடு கொண்டதாகவும், அதன் பின்னர் மாணவி அந்த வகுப்பில் தொடர வேண்டாம், என மாற்று ஏற்பாடுகள் செய்யலாம் என அதிபர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பொலிஸாரிடம் முறைப்பாடு

இதற்கிடையில், மாணவியின் தாயாரிடம் பாடசாலையின் உப அதிபர், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும், மாணவியை திறமையற்றவர் மற்றும் ஒழுக்கமற்றவர் என்ற தொனியில் விமர்சித்ததாகவும், மாணவியின் தந்தையையும் குறிப்பிட்டு அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தமக்கும் தமது மகளுக்கும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ளதுடன், பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்த மாணவியின் தந்தை, இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு..! நியாயம் கேட்டு சென்ற பெற்றோர் நேர்ந்த கதி | Student Assaulted By Teacher Suffers Mental Health

மேலும், கல்வி அமைச்சர், சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் முறைப்பாட்டுக் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பொலிஸார் விசாரணைக்காக அழைத்தபோது, அதிபரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது, பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது, மாணவியின் தாயாருக்கு எந்தவித அழுத்தமும் வழங்கப்படாது என உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

பெற்றோர் - மாணவிக்கு எதிராக விமர்சனம் பரவல்

இந்த விவகாரம் குறித்த பாடசாலையைத் தாண்டி ஏனைய பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும், பாடசாலைக்குள்ளும் வெளியிலும் மாணவியின் தாயாருக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு..! நியாயம் கேட்டு சென்ற பெற்றோர் நேர்ந்த கதி | Student Assaulted By Teacher Suffers Mental Health

மேலும், மாணவியின் தந்தை குறித்து "சண்டைக்காரர்", "பிரச்சினைக்குரியவர்" என்ற வகையிலான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைத்து, பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய செயல் என மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவி பாடசாலைக்குச் செல்லவே அச்சமடைந்துள்ளதாகவும், இத்தகைய சூழலில் அவர் எவ்வாறு கல்வியைத் தொடர முடியும்? அவரது பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்குவார்கள்? என்ற கேள்விகளையும் பெற்றோர் எழுப்பியுள்ளன. 

பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள்

பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள்

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்


மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US