யாழில் சட்டவிரோத மதுபானத்தை உடமையில் வைத்திருந்த மாணவன்: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, குறித்த மாணவனை அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் நேற்று(03.10.2022) உத்தரவிட்டுள்ளது.
குற்றச் செயல்

இந்த மாணவன் 3 லீட்டர் கசிப்பு மற்றும் 16 லீட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவு

கைது செய்யப்பட்ட சிறுவனை விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே சிறுவனை நன்னடத்தை பாடசாலையில்
ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri