உயர்தர பரீட்சையில் மூன்று சித்திகளை பெற்று பார்வையற்ற மாணவி சாதனை
குருநாகல் - பிதுர்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஹிமாஷா கவிந்தி ஹேரத் என்ற பார்வையற்ற மாணவி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் மூன்று சித்திகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த போதிலும், தனியார் விண்ணப்பதாரராக கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்.
அந்த வகையில் பொருளாதாரம், வர்த்தகம், அரச அறிவியல் ஆகிய பாடங்கள் மூன்றில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளின் பாட்டுப்போட்டி
குருநாகல் மஹிந்த மகா வித்தியாலயத்தில் 2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஹிமாசா ஒன்பது பாடங்களிலும் சித்தியடைந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளின் பாட்டுப் போட்டியில், நாடளாவிய ரீதியில் முதலாவது வந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
