இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் போராட்டம்
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ். நகரில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 11 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது, “விவசாயிகளின் போராட்டம் இந்திய - இலங்கை எதை நோக்கி....... புரிந்து கொள்வோம், ஒன்றிணைவோம், போராடுவோம். உணவளிக்கும் உணவளிக்கும் உயிரோடு விளையாடதே! உலகமே எதிர்த்த நிற்கும் இனி உன்னை..” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
இந்த போராட்டமானது நாடளாவிய ரீதியில் மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்பு சார்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri